120 நாட்களுக்கு மேல் உணவருந்தாமல் உயிர்வாழும் உயிரினம்!

நன்றி குங்குமம் முத்தாரம்

பல ஆயிரம் ஆண்டுகளாக வாழ்ந்துவரும் ஓர் உயிரினம் பனிக்கரடி. பெரும்பா லும் நிலத்தில் பிறந்தாலும் பனிக்கட்டிகள் தான் இதன் இருப்பிடம். பருவநிலை மாற்றத்தால் பனிக்கரடி இருப்பிடங்கள் காணாமல் போவது துயரம். இந்நிலையில் பனிக்கரடிகளுக்கே உரித்தான  வினோத  வழக்கம் ஒன்றை மருத்துவர்கள் ஆராய்ந்து வருகின்றனர். பொதுவாக பனிக்கரடிகள் உறைபனி வருவதற்கு முந்தைய மாதங்களில், அளவுக்கு அதிகமாக இரைகளை உண்டு கொழுத்து விடுகின்றன. கடுமையாக பனி கொட்ட ஆரம்பித்ததும் தங்களின் குகைகளுக்குள் போய் ஒடுங்கிக் கொள்கின்றன. இந்த நிகழ்வை ‘ஹைபர்னேஷன்’ என விஞ்ஞானிகள் அழைக்கின்றனர். குகைக்குள்ளேயே நீண்ட உறக்கம், அசைவில்லாமல் படுத்திருப்பது என்று நான்கு மாதங் களைக் கழித்து, இளைத்துப் போய் வெளியே வரும். அந்த நான்கு மாதங்களில், உயிர் வாழ அது, உடலில் உள்ள மிகையான கொழுப்பை பயன்படுத்திக் கொள்ளும்.

விஞ்ஞானிகளுக்கு ஒரு ஆச்சரியம் என்னவெனில், பனிக் கரடி தசைகளுக்கு வேலை கொடுக்காமல் பல மாதங்கள் இருந்தாலும், தசைகளின் செயல்பாடு பாதிக்கப்படாமல் ஆரோக்கியமாகவே இருப்பது எப்படி என்பது தான். அண்மையில்,அமெரிக் காவிலுள்ள யூட்டா பல்கலைக்கழக விஞ்ஞானிகள்,  ஹைபர் னேஷனில் இருக்கும் வழக்க முள்ள சில அணில், எலி, முள்ளம்பன்றி போன்ற விலங்குகளை ஆராய்ந் தனர். அதில், அவற்றின் மரபணுவில் உள்ள தனித் தன்மைகளைக் கண்டறிந்துள்ளனர். இதை ,  பூமியிலிருந்து செவ்வாய் போன்ற கோள்களுக்கு பயணிக்கும் விண்வெளி வீரர் கள், பல மாதங்கள் அசையாமல் படுத் திருக்க நேரும் நோயாளிகள் போன்றவர்களின் தசைகளில் பாதிப்புகளைத் தடுக்கப் பயன்படுத்தலாம் எனவும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

Related Stories: