×

பொருளாதாரம் தொடர்ந்து சரிவு: அடுத்து என்ன செய்வது? மோடிக்கு தெரியவில்லை: ராகுல் தாக்கு

புதுடெல்லி:  ‘பொருளாதாரத்தில் அடுத்து என்ன செய்வது என பிரதமருக்கும், நிதியமைச்சருக்கும் எந்த ஒரு சிந்தனையும் இல்லை,’ என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.  நாட்டின் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து சரிவை கண்டுள்ளது. இந்நிலையில், பாஜ தலைமையிலான மத்திய அரசு வருகிற ஒன்றாம் தேதி 2020-2021ம் ஆண்டுக்கான  பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்  பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். பட்ஜெட்டில் வரும் அறிவிப்புகளால் தற்போது நிலவி வரும் பொருளாதார நெருக்கடி குறையுமா அல்லது அதிகரிக்குமா என்ற அச்சம் மக்கள் மனதில் எழுந்துள்ளது.

 இது தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று, ‘பட்ெஜட் -2020’ என்ற ஹேஷ்டேக்குடன் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘பிரதமர் மோடியும், அவரது பொருளாதார ஆலோசகர்களின் கனவு குழுவும் முன்னதாகவே பொருளாதாரத்தை திருப்பிப் போட்டுள்ளன. முன்னதாக, ஜிடிபி 7.5 சதவீதம், பண வீக்கம் 3.5 சதவீதமாக இருந்தது. தற்போது ஜிடிபி 3.5 சதவீதம், பணவீக்கம் 7.5 சதவீதமாக உள்ளது. பொருளாதாரத்தில் அடுத்து என்ன செய்வது என்பது குறித்து பிரதமர் மோடிக்கும், நிதியமைச்சருக்கும் எந்த சிந்தனையும் கிடையாது,’ என கூறியுள்ளார்.


Tags : Rahul ,attack ,Modi , Economy collapse, Modi, Rahul
× RELATED மோடியின் பொய்களால் வரலாறுகள் மாறி...