×

கிருஷ்ணகிரி அருகே டூவீலரை பந்தாடிய யானைகள்

தேன்கனிக்கோட்டை: தளி அருகே பயிர்களை சேதம் செய்த யானை கூட்டத்தை விரட்டும் போது, டூவீலரை தூக்கி வீசி பந்தாடியபடி யானை கூட்டம் சென்றது. கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அருகே ஜவளகிரி வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக 40 யானைகள் இரவில் முகாமிட்டு, காலையில் அருகில் உள்ள கிராம பகுதிக்கு நுழைந்து பயிர்களை நாசப்படுத்தி வருகிறது.  இந்நிலையில் தளி அருகே நெல்லூர் கிராமத்தில் உள்ள தோட்டங்களில் நேற்று யானைகள்  புகுந்தது. அங்கு பயிரிடப்பட்டிருந்த தக்காளி, முட்டைகோஸ், பீன்ஸ், வாழை உள்ளிட்டவற்றை காலால் மிதித்தும், தின்றும் நாசப்படுத்தியது. இதை கண்ட விவசாயிகள் யானைகள் கூட்டத்தை பட்டாசு வெடித்து விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.  

அப்போது கூட்டத்தில் இருந்த ஒரு யானை, சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டூவீலரை தும்பிக்கையால் தூக்கி வீசி பந்தாடியது. இதில் வாகனம் முழுவதும் நாசமானது. பின்னர் தளி சாலை வழியாக அருகில் உள்ள காட்டு பகுதிக்கு சென்றது. இது குறித்து அப்பகுதி விவசாயிகள் அளித்த தகவலின்பேரில், ராயக்கோட்டை வனத்துறையினர் வந்து யானைகள் சென்ற பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். தற்போது வனப்பகுதியில் பனியின் தாக்கம் அதிகரித்துள்ளதால், அதிகாலையில் யானைகள் நடமாட்டத்தை கண்காணிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.


Tags : Krishnagiri Krishnagiri ,Duellers , Krishnagiri, elephants
× RELATED கிருஷ்ணகிரி அருகே லாரி மீது சொகுசு பேருந்து மோதிய விபத்து