×

கோடநாடு கொலை வழக்கில் சாட்சிகள் விசாரணை துவக்கம்

ஊட்டி:  நீலகிரி மாவட்டம் கோத்தகிரி  அருகேயுள்ள கோடநாட்டில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான  பங்களாவுக்குள் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம்  24ம் தேதி நுழைந்த கும்பல் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளி  ஓம்பகதூரை கொலை செய்துவிட்டு உள்ளே சென்றது. மேலும் பங்களாவில் இருந்த சில  ஆவணங்களை கொள்ளை அடித்து சென்றது. இவ்வழக்கில், முக்கிய  குற்றவாளி கனகராஜ் சேலம் அருகே விபத்தில் பலியானார். இவ்வழக்கில்  தொடர்புடைய சயான், கேரளாவை சேர்ந்த சந்தோஷ், தீபு, சதீசன், உதயகுமார்,  வாளையார் மனோஜ், மனோஜ் சமி, ஜித்தீன் ஜாய், ஜம்சீர் அலி மற்றும் பிஜின்  குட்டி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில் சயான், வாளையார் மனோஜ் ஆகியோர்  கோவை மத்திய சிறையிலும் மற்ற 8 பேர் ஜாமீனிலும் உள்ளனர்.

இவ்வழக்கு ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.  இவ்வழக்கில்  முக்கிய சாட்சியான  கிருஷ்ணபகதூர்தாபா கண்டுபிடிக்க முடியாத நிலையில், 2-வது சாட்சியான  பஞ்சம் விஷ்வகர்மா, 3-வது சாட்சியான சுனில் தாபா ஆகியோர் அரசு தரப்பில்  நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் இருவரிடமும்  விசாரணை செய்யப்பட்டது.  அவை அனைத்தும் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து இவ்வழக்கின் விசாரணையை  வரும் பிப்ரவரி மாதம் 10ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Tags : Investigation ,witnesses ,murder ,murderer ,Kodanad , Kodanadu murder case
× RELATED தேர்தல் பத்திர முறைகேடு விவகாரம்...