×

செல்போனில் ஆபாச படம் பதிவிறக்கம் செய்தவர் கைது

அம்பத்தூர்: தமிழகத்தில் குழந்தைகளின் ஆபாச படங்களை பார்த்தவர்கள், பதிவிறக்கம் செய்தவர்களின் செல்போன் எண்கள், கம்ப்யூட்டர் ஐ.பி. முகவரி அடங்கிய பட்டியலை மத்திய உள்துறை தமிழக காவல்துறைக்கு அனுப்பி வைத்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி கைது செய்து வருகின்றனர். இந்நிலையில் அம்பத்தூரில் சிறுவர், சிறுமிகளை ஈடுபடுத்தி எடுக்கப்பட்ட ஆபாச படத்தை கடந்த 2 ஆண்டுகளாக செல்போனில் பார்த்து வந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். என்.சி.ஆர்.பி.யில் கிடைத்த அறிக்கையின்படி  அம்பத்தூர் கள்ளிக்குப்பம் பகுதியை சேர்ந்த ஹரிஷ் (24) என்ற பட்டதாரியை அம்பத்தூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இச்சம்பவம் ஆபாச படம் பார்ப்பவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Cell phone, porn movie, arrested
× RELATED காதலிக்குமாறு இளம்பெண்ணுக்கு...