சென்னை மாநகராட்சி பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிக்கு நவீன வாகனம்: அமைச்சர் தொடங்கி வைத்தார்

சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்வதற்காக, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி டெலிஹாண்ட்லர் உபகரணம், ரீசைக்லர் வசதியுடன் கூடிய சக்ஷன் கம் ஜெட்டின் வாகனம் மற்றும் 3 நவீன குளிர்சாதன வசதியுடன் கூடிய மீட்பு வாகனங்களை ரிப்பன் மாளிகையில் நடந்த  நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கொடியசைத்து துவக்கி வைத்தார். சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இயற்கை பேரிடர் நிகழ்வுகளால் கீழே விழுந்த மரங்கள், மரக்கிளைகள், மின்கம்பங்கள் போன்றவற்றை அகற்றி சீர்செய்யவும் 11 மீட்டர் உயரமுள்ள கட்டிடங்களில் அகப்பட்டுள்ள மனிதர்களை மீட்கவும், மாநில பேரிடர் மேலாண்மை நிதியின் கீழ் ₹39.50 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு இணைப்புகளுடன் கூடிய ஒரு டெலிஹாண்ட்லர் உபகரணம் நிவாரண பணிகள் மேற்கொள்வதற்காக நேற்று வழங்கப்பட்டது.

மேலும், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ₹32 கோடி மதிப்பீட்டில் கனரக வாகன அடிச்சட்டத்தின் மீது பொருத்தப்பட்ட ரீசைக்லர் வசதியுடன் கூடிய சக்ஷன் கம் ஜெட்டின் வாகனங்கள் 6 எண்ணிக்கையிலும், பேரிடர் மேலாண்மை நிதியின் கீழ் 5.20 கோடி மதிப்பீட்டில் 1 எண்ணிக்கையில் என மொத்தம் 7 வாகனங்கள் கொள்முதல் செய்ய பணி ஆணை வழங்கப்பட்டது. இதில் 1 வாகனம் தற்பொழுது பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது.  இதனை தொடர்ந்து தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் பொது சுகாதாரத்துறையின் சார்பில் சாலை மற்றும் தெருவோரங்களில் வசிக்கும் வீடற்றோர், முதியோர் மற்றும் மனநலம் குன்றியவர்களை மீட்டு காப்பகங்களில் சேர்க்க ஏதுவாக சக்கர நாற்காலி, சாய்தளம், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஒளி, ஒலி அமைப்புகளுடன் கூடிய குளிர்சாதன வசதிகள் கொண்ட 50 லட்சம் மதிப்பீட்டில் 3 நவீன குளிர்சாதன வசதியுடன் கூடிய மீட்பு வாகனங்கள் வீடற்றோரை மீட்கும் பணிக்காக அமைச்சர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

 நிகழ்ச்சியில் தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு மற்றும் நிதி சேவை நிறுவனத்தின் தலைவர், மேலாண்மை இயக்குநர் மற்றும் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அபூர்வ வர்மா, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், துணை ஆணையர் (பணிகள்) குமாரவேல் பாண்டியன், துணை ஆணையர் (சுகாதாரம்) மதுசுதன்ரெட்டி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: