அப்போலோ மருத்துவமனையில் முதுகுதண்டுவட பாதிப்புக்கு அதிநவீன அறுவை சிகிச்சை

சென்னை: ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரை சேர்ந்த வயன் ராபர்ட் எலிசன், டிசானியா தெரேசா சிமோனெல்லி தம்பதியின் மூத்த மகள் ஜேவியா (13). இவர், அரிய வகை முதுகுதண்டுவட வளைவு நோய் அடலசன்ட் இடியோபாதிக் ஸ்கோலிசிசால் பாதிக்கப்பட்டிருந்தார்.  இதனால் தண்டுவடம் 2 இடங்களில் வளைந்து ஆங்கில எழுத்தான ‘எஸ்’ (s) வடிவில் காணப்பட்டது. இந்த பாதிப்பு அறுவை சிகிச்ைச மூலம் அப்போலோ மருத்துவமனையில் கடந்த 24ம் தேதி சரி செய்யப்பட்டது.  இதுகுறித்து அப்போலோ மருத்துமவனை முதுதண்டுவட சிகிச்சை மைய தலைவர் டாக்டர் சஜன் ஹெக்டே கூறியதாவது: ஜாவியாவுக்கு 11 வயது இருந்தபோது, அவரின் வலது தோள்பட்டை, இடது தோள்பட்டையை விட உயரத்தில் இருந்தது. ஆஸ்திரேலியாவில் உள்ள மருத்துமவனைகளில் ஆய்வு செய்தபோது, அடலசன்ட் இடியோபாதிக் ஸ்கோலிசிஸ் என்ற நோயால் அவர் பாதிக்கப்பட்டிருந்ததை டாக்டர்கள் கண்டறிந்தனர்.

உலக அளவில் 8 முதல் 12 வயது வரை உள்ள பெண் குழந்தைகளில் 2 சதவீதம் பேருக்கு இவ்வகை பாதிப்பு ஏற்படுகிறது. தண்டுவடத்தை நேரான நிலைக்கு கொண்டு வர அறுவை சிகிச்சை மேற்கொண்டு உலோக தகடு பொருத்த ஆஸ்திரேலிய டாக்டர்கள் பரிந்துரைத்தனர். ஆனால் உலோக தகடு வைக்கும்பட்சத்தில் முதுகெலும்பு நேரான நிலையிலேயே இருக்கும், வளைக்க முடியாது. இதனால் இயல்பான வாழ்க்கைக்கு திரும்ப முடியாது என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.  இந்நிலையில் அறுவை சிகிச்சைக்கு பின்னும் இயல்பான வாழ்க்கையை தொடரும் வகையில் அறுவை சிகிச்சை ஏதும் உள்ளதா என ஐரோப்பிய நாடுகள் உள்பட பல்வேறு நாடுகளில் உள்ள முக்கிய மருத்துமவனைகளில் ஜாவியாவின் பெற்றோர் விசாரித்தனர். சென்னை அப்போலோ மருத்துமவனையை தொடர்பு ெகாண்டு அறுவை சிகிச்சை தொடர்பாக கேட்டறிந்தனர்.

அதைத்தொடர்ந்து சென்னை வந்த ஜேவியாவுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது எஸ் வடிவில் அவரின் முதுகு தண்டுவடம் வளைந்து இருந்தது கண்டறியப்பட்டது.  எனவே ‘‘நான்- பியூசன் ஆன்டெரியர் ஸ்கோலியாசிஸ் கரெக்சன்’’ முறையை பின்பற்றி முதுகுதண்டுவடத்தை நேரான நிலைக்கு கொண்டு வர முடிவு செய்தோம். உலோக தகடுக்கு பதிலாக பாலி எத்திலீனால் ஆன டெரிப்பிளின் என்ற வளையும்தன்மை பொருள் அறுவை சிகிச்சையின்போது பயன்படுத்தப்பட்டது. 10 டாக்டர்கள் குழுவினர் மூன்றரை மணி நேரம் சிக்கலான இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர்.

ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் முதல் முறையாக அப்போலோ மருத்துமவனையில் இந்த அறுவை சிகிச்ைச மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒரு வாரத்தில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளார். அதன்பின் எப்போதும் போல வழக்கமான பணிகளை மேற்கொள்ளலாம். இவ்வாறு டாக்டர் சஜன் ஹெக்டே கூறினார். அப்போது அப்போலோ மருத்துவ குழுமத்தில் துணைத்தலைவர் பிரீத்தா ரெட்டி, ஜேவியா மற்றும் டாக்டர்கள் உடன் இருந்தனர்.

Related Stories: