மாணவர்களுக்கு காலை உணவு வழங்க உணவுக்கூடம் அமைக்க 2 கோடி: கவர்னர் பன்வாரிலால் வழங்கினார்

சென்னை: சென்னை ஆளுநர் மாளிகை  வெளியிட்ட  செய்திக்குறிப்பு: மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் 12 ஆயிரம் ஏழை மாணவர்களுக்கு காலை உணவு வழங்குவதற்காக கட்டப்படும் உணவுக்கூடத்திற்கு 2 கோடியை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வழங்கினார். பிப்ரவரி 2019ல் கவர்னர் காலை உணவு வழங்கும் திட்டத்தை துவங்கினார். இது அட்சய பாத்திரா பவுண்டேஷன் மூலம் செயல்படுகிறது. இத்திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. அட்சய பாத்திரா பவுண்டேஷன் ஒரு என்ஜிஓ நிறுவனமாகும். இது 12 மாநிலங்களில் 18 லட்சம் குழந்தைகளுக்கு நாள்தோறும் காலை உணவு வழங்கி வருகிறது.

இந்நிலையில் இதை பார்த்த சென்னை மாநகராட்சி இத்திட்டத்தை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டது. அதன்படி கிரீம்ஸ் ரோட்டில் மத்திய உணவுக்கூடம் அமைக்க முடிவு செய்தது. அக்‌ஷய பாத்திரா பவுண்டேஷன் இத்திட்டத்தை 5 கோடியில் அமைக்க தயாராகி வருகிறது. சம்பந்தப்பட்ட தொகையை வழங்க ராஜ்பவன் திட்டமிட்டது. அதன்படி முதல் தவணையாக 2 கோடிக்கான காசோலையை கவர்னர் வழங்கினார். மீதம் உள்ள தொகை திட்டத்தின் முன்னேற்றத்தின் அடிப்படையில் வழங்கப்படும். இது 6 மாதத்திற்குள் தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: