பெரம்பூரில் சொத்து வரி செலுத்தாத வணிக வளாகம் முன் குப்பை லாரி நிறுத்தம்: மாநகராட்சி நடவடிக்கை

பெரம்பூர்: சொத்து வரி செலுத்தாததால் பெரம்பூர், பேப்பர் மில்ஸ் சாலை பகுதியில் இயங்கி வரும், தனியார் வணிக வளாகத்தில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டினர்.  பெரம்பூர், பேப்பர் மில்ஸ் சாலை பகுதியில் தனியார் ஸ்பெக்ட்ரம் மால் இயங்கி வருகிறது. இந்த வளாகத்தில் சினிமா திரையரங்குகள் மற்றும் பல்வேறு பிரபல நிறுவனங்களின் கடைகள் இயங்கி வருகின்றன. கடந்த இந்த வணிக வளாக உரிமையாளர்கள் 2015ம் ஆண்டு முதல் சென்னை மாநகராட்சிக்கு முறையாக சொத்து வரி செலுத்தவில்லை எனவும், அதன்படி ஒரு கோடி அளவுக்கு பாக்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் சென்னை திருவிக நகர், 6வது மண்டல வருவாய் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் என 20க்கும் மேற்பட்டோர் நேற்று மதியம் ஸ்பெக்ட்ரம் வணிக வளாகத்திற்கு வந்தனர். பின்னர் முறையாக சொத்து வரி செலுத்தவில்லை என்று, எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டினர். இதனால் அங்கிருந்த ஊழியர்களுக்கும், மாநகராட்சி அதிகாரிகளுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து வணிக வளாக ஊழியர்களிடம், ‘‘நிலுவையில் உள்ள சொத்து வரி தொகையை உடனடியாக செலுத்த வேண்டும். இல்லையேல் இந்த வணிக வளாகத்தை சீல் வைக்க நேரிடும்’’ என மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

Related Stories: