பிப்.1ம் தேதி நடக்கிறது திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டம்: உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டம் வருகிற 1ம் தேதி சென்னையில் நடைபெறும் என்று உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: திமுக இளைஞர் அணி மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டம் வருகிற பிப்ரவரி 1ம் தேதி மாலை 4 மணியளவில் சென்னை அமைந்தகரையில் உள்ள லட்சுமி டாக்கீஸ் ரோட்டில் உள்ள முரளி கிருஷ்ணா திருமண மண்டபத்தில் நடக்கிறது. கூட்டத்திற்கு இளைஞர் அணி துணை செயலாளர்கள் ஆர்.டி.சேகர் எம்எல்ஏ, தாயகம் கவி எம்எல்ஏ, அசன் முகமது ஜின்னா, அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்எல்ஏ, பைந்தமிழ்பாரி, எஸ்.ஜோயல், ஆ.துரை முன்னிலை வகிக்கின்றனர். கூட்டத்தில் மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags : DMK ,Youth Team Executives Meeting ,Udayanidhi Stalin Announces DMK Youth Team Executives Meeting , On February 1, DMK Youth Team and Executives Meeting, Udayanidhi Stalin, Announced
× RELATED மக்களுக்காக அதிமுக அரசு எதுவும்...