அதிபர் டிரம்ப் பிப்.24ல் இந்தியா வருகை

புதுடெல்லி: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வருகிற பிப்ரவரி 24ம் தேதி 3 நாள் பயணமாக இந்தியா வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் பிப்ரவரி இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அங்கு தேர்தல் பிரசாரங்கள் தீவிரமாக நடந்து வருகிறது.. இந்நிலையில், அதிபர் டிரம்ப் 3 நாள் பயணமாக இந்தியா வருகிறார். அதிபர் டிரம்ப் வருகிற 24ம் தேதி முதல் 26ம் தேதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது. டிரம்ப்பின் இந்த பயணத்தின்போது இந்தியா -அமெரிக்கா இடையே வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிபர் டிரம்பின் இந்திய வருகை உறுதி செய்யப்பட்டபோதிலும் எந்த தேதியில் அவர் இந்தியா வருகின்றார் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதிபர் டிரம்ப் இந்தியா வருவது இது தான் முதல் முறையாகும்.

Advertising
Advertising

Related Stories: