தமிழ்முரசு செய்தி எதிரொலி: டவுன் சாலையில் பாதாள சாக்கடை உடைப்பு சரி செய்யப்பட்டது

நெல்லை: நெல்லை டவுன் சாலையில் பாதாள சாக்கடையில் ஏற்பட்ட உடைப்பு தமிழ்முரசு செய்தி எதிரொலியால் இன்று காலையில் சரிசெய்யப்பட்டது. நெல்லை டவுன் தெற்கு மவுண்ட் ரோட்டில் குடிநீர் குழாய்களுக்காக தோண்டப்பட்ட குழிகளால் ஆங்காங்கே சிதிலமடைந்து கிடக்கின்றன. இச்சாலையில் உள்ள தியேட்டருக்கு முன்பாக பாதாள சாக்கடையில் கடந்த ஒருமாதமாக உடைப்பு ஏற்பட்டு சாலையில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடியது. கழிவுநீர் சாலையின் இருமருங்கிலும் தேங்கியதால் வாகனங்கள் செல்ல சிரமம் ஏற்பட்டது.பஸ்கள் சாலையில் சென்றபோது கழிவுநீர் பாதசாரிகள் மேல் தெறித்து வந்தது.

இதுகுறித்து தமிழ்முரசில் நேற்று செய்தி வெளியானது. சாலையில் உள்ள உடைப்பை சரி செய்து வாகனங்கள் சீராக செல்ல வழிவகுக்க வேண்டும் எனநெல்லை மாவட்ட பொதுஜன  பொதுநலச்சங்கம் கோரிக்கை விடுத்தது. இதன் காரணமாக இன்று அதிகாலையில் அங்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் பாதாள சாக்கடை உடைப்பை சரி செய்து, சாலைக்கு கழிவுநீர் வராத வகையில் ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.

Tags : Downpour ,Tamilmurus ,Town Road ,Echoes: Town Road , Down road, sewer break, repaired
× RELATED கோடை தொடக்கம் எதிரொலி வனவிலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க வேண்டும்