தர்மபுரியில் ஏலச்சீட்டு நடத்தி மோசடி பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க அழைப்பு

சேலம்: தர்மபுரியில் ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்யப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க போலீசார் அழைப்பு விடுத்துள்ளனர்.தர்மபுரி தொப்பூர் அருகேயுள்ள பப்பிரெட்டியூர் காட்டுவளவை சேர்ந்தவர் கோபால். இவர் தனது உறவினர்களான கார்த்திக், கோபாலகிருஷ்ணன், மாரியப்பன், விஜயா, பாலசிங்கம், மாது, மதியழகன், செல்வராஜ், பெரியகண்ணன், புகழேந்தி ஆகியோருடன் ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார். இவர்களிடம் நல்லம்பள்ளி லளிகம் ராஜவீதியை சேர்ந்த மூர்த்தி என்பவர் பணம் கட்டியுள்ளார்.

ஆனால் பணத்தை திரும்ப வழங்காமல் மோசடி செய்துவிட்டதாக சேலம் பொருளாதார குற்றப்பிரிவில் மூர்த்தி புகார் அளித்தார். இதையடுத்து கோபால் உள்பட 11 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களிடம் சீட்டு பணம் போட்டு பாதிக்கப்பட்டர்கள் யாராவது இருந்தால் உடனடியாக சேலம் வெண்ணங்கொடி முனியப்பன் கோயில் பின் பகுதியில் இருக்கும் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் தங்களிடம் இருக்கும் ஒரிஜினல் சீட்டு அட்டை மற்றும் ஆவணங்களுடன் எழுத்து மூலமான புகார் கொடுக்குமாறு பொருளாதார குற்றப் பிரிவு போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.Tags : bidders ,Auction ,Dharmapuri ,fraud victims , Auction ,bidders, Dharmapuri , complaints , fraud victims
× RELATED டிஎன்பிஎல் சீசன்-5 ஏலம்