டெல்லி சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிப்.3, 4-ம் தேதிகளில் பிரதமர் மோடி பிரசாரம்

டெல்லி: டெல்லி சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிப்ரவரி 3 மற்றும் 4-ம் தேதிகளில் பிரதமர் மோடி பிரசாரம் செய்கிறார். தலைநகர் டெல்லியில் பிப்ரவரி 8-ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வருகின்றன. மத்தியில் ஆட்சியில் உள்ள பா.ஜ.க. டெல்லியில் ஆட்சியைப் பிடிக்க தீவிரமாக களப்பணியாற்றி வருகிறது. வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

Advertising
Advertising

பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அடங்கிய பேச்சாளர் பட்டியலை பாஜக அறிவித்துள்ளது. இந்நிலையில், டெல்லி சட்டசபை தேர்தலை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி கிழக்கு டெல்லியில் பிப்ரவரி 3ம் தேதியும், துவாரகா பகுதியில் 4-ம் தேதியும் பிரசாரத்தில் ஈடுபடுகிறார் என அக்கட்சி தெரிவித்துள்ளது. டெல்லி சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தின்போது சர்ச்சைக்குறிய வகையில் பேசியதன் காரணமாக பாஜகவின் இணை அமைச்சரும், அக்கட்சியின் நட்சத்திர பேச்சாளருமான அனுராக் தாக்கூர் பெயரை பட்டியலில் இருந்து நீக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: