காஞ்சிபுரத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சுவரோவியம் வரைந்த 2 பெண்கள் கைது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சுவரோவியம் வரைந்த 2 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ரயில் நிலையம் அருகே சுவரோவியம் வரைந்து கோஷமிட்ட 2 பெண்களை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

மத்திய பாஜக அரசு கடந்த டிசம்பரில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றியது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து கடந்த 2014-ம் ஆண்டுக்கு முன்பாக இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்து இங்கு வசிக்கும் இந்துக்கள், சீக்கியா்கள், பௌத்தா்கள், சமணா்கள், பார்சி இனத்தவா், கிறிஸ்தவா்கள் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்று இந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால், முஸ்லிம்கள் மட்டும் இதில் இடம் பெறவில்லை. அதனால், மதரீதியாக இந்த சட்டம் அமைந்துள்ளதால், அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று கூறி, நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  

நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் நடத்திய போராட்டத்தால் பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மாத்திரை பாஜக அரசு குடியுரிமை திருத்த சட்டத்தில் பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்து வருகிறது. இதனால் நாடு முழுவதும் போராட்டங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. இதனை தொடர்ந்து காஞ்சிபுரம் ரயில் நிலையம் அருகே சுவரோவியம் வரைந்து கோஷமிட்ட 2 பெண்களை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: