துரோகிகளை சுட்டுக்கொல்லுங்கள் என்ற முழக்கத்தை எழுப்பிய அனுராக் தாக்கூருக்கு கர்நாடக சுற்றுலாத்துறை அமைச்சர் ஆதரவு!

பெங்களூரு: துரோகிகளை சுட்டுக்கொல்லுங்கள் என்ற முழக்கத்தை எழுப்பிய பாஜக எம்.பி.யும், மத்திய இணை அமைச்சருமான அனுராக் தாக்கூருக்கு கர்நாடக மாநில அமைச்சர் ஒருவர் ஆதரவு தெரிவித்துள்ளார். கர்நாடக சுற்றுலாத்துறை அமைச்சர் சி.டி.ரவி, ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் துரோகிகளுக்கு எதிரான அனுராக் தாக்கூரின் கருத்துக்கு தெரிவிப்பவர்கள் எல்லாம், பயங்கரவாதிகள் அஜ்மல் கசாப் மற்றும் யாகுப் மேனனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்தவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். அவர்கள் நாட்டை துண்டாடும் குழுவை ஆதரிப்பவர்கள் என்றும், குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பொய்களை பரப்புபவர்கள் எனவும் பதிவிட்டுள்ளார்.

Advertising
Advertising

தேச விரோதிகளுக்கு பிரியாணி அல்ல, துப்பாக்கி குண்டுகள் தான் கிடைக்க என்று கூறியுள்ள அவர் #istandwithanuragthakur என்ற ஹேஷ்டாக்கையும் பதிவிட்டுள்ளார். டெல்லியில் பிப்ரவரி 8ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகள் அனைத்தும் அங்கு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், இரு நாட்களுக்கு முன்னர் பரபரப்புரை கூட்டம் ஒன்றில் பேசிய அனுராக் தாக்கூர், தேச துரோகிகளை சுட்டுக்கொல்லுங்கள் என்ற முழக்கத்தை எழுப்பி மற்றவர்களையும் முழக்கமிடுமாறு தூண்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து தேர்தல் ஆணையத்துக்கு புகார் சென்றது. இதையடுத்து, இதுதொடர்பாக விளக்கம் கேட்டு அனுராக் தாக்கூருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: