ஜனநாயக மாளிகைக்கு 4-வது தூணாக திகழ்கிறது பத்திரிக்கைத்துறை: தேசிய செய்தித்தாள் தினத்தை முன்னிட்டு முதல்வர் வாழ்த்து

சென்னை: தேசிய செய்தித்தாள் தினத்தையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவில் முதன்முதலாக  ‘ஹிக்கீஸ் பெங்கால் கெஜெட்’ என்ற வார இதழ் 1780ம் ஆண்டு, ஜன.29ம் தேதி வெளியிடப்பட்டது. ஆங்கிலேயரான ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கீ இதனை வெளியிட்டார். கொல்கத்தாவில் இருந்து, அரசியல், வர்த்தக ரீதியான இதழாக வெளிவந்தது ஹிக்கீஸ் பெங்கால் கெஜெட். அப்போது நடந்த அரசியல் சம்பவம்,  போர் சம்பவங்களை பரபரப்பாக இந்த பத்திரிகையில் வெளியிட்டார்.

அதன்பின்னரே தினமும் செய்திகளை வழங்கும் செய்தித்தாள்கள் அறிமுகமாயின. உலகில் செய்தித்தாள்கள் அறிமுகமான ஆண்டு தெரியமா? கிபி 1476ல் இங்கிலாந்தில் வில்லியம் காக்ஸ்டன் என்பவர் அச்சு இயந்திரத்தைக் கண்டறிந்தார். அப்போது கிறிஸ்தவ சமயத்தைப் பரப்ப முனைந்த மேலை நாட்டினர், 1622ம் ஆண்டில் முதல் செய்தி இதழாக ‘தி வீக்லி நியூஸ்’ வெளியிடப்பட்டது. பின் லண்டன் கெஜட்டர் என்ற நாளிதழ் 1666ல் வெளிவந்தது. பின்னர் நாளிதழ்களே காலை, மாலை என வெளிவரத்தொடங்கின. நாட்டு நடப்புகளை கோர்வையாக, ருசிகரமாக தரும் செய்தித்தாள்களை கவுரவிக்கும் ஒரு தினமே தேசிய செய்தித்தாள் தினம்.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 29ம் தேதி தேசி செய்தித்தாள் தினமாக கொண்டாடப்படுகிறது.அதன் அடிப்படையில் இன்று தேசிய செய்தித்தாள் தினத்தையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்; சட்டமன்றம், நீதிமன்றம், நிர்வாகம் போன்ற தூண்களைக் கொண்ட ஜனநாயக மாளிகைக்கு நான்காவது தூணாக திகழ்கின்ற  பத்திரிகை துறை  பூரண சுதந்திரத்தோடு, நாட்டு மக்களுக்கு நற்பணிகளை தொடர்ந்திட, தேசிய செய்தித்தாள் தினமாகிய இந்நன்நாளில் என் உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

கடைக்கோடி மக்களுக்கும் செய்தியோடு, அறிவூட்டும் அளப்பரிய தொண்டினை புரிந்து வரும் செய்தியாளர்களுக்கு எனது பாராட்டுகளை இவ்வேளையில் உரித்தாக்குகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories: