×

எருதுவிடும் விழாவிற்கு அனுமதி தர மறுத்ததால் திருப்பத்தூர் சப் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

வேலூர்: வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் எருது விடும் விழாவிற்கு அனுமதி தராததால் பொதுமக்கள் துணையாச்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தியில் ஈடுபட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலாப்பூர் பேட்டை அருகே புத்தாண்டு  குப்பம் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளாக பொங்கல் திருவிழாவையொட்டி எருது விடும் நிகழ்ச்சியானது நடைபெற்று வருகிறது. தொடர்ந்து, ஊர் பகுதியில் காளைகளை ஓடவிட்டு, குறிப்பிட்ட நேரத்திற்குள் ஓடும் காளைகளுக்கு லட்சம் ரூபாய் வரை பரிசுகள் வழங்கப்படுவது வழக்கம். அதன் அடிப்படையில் தற்போது, புத்தாண்டு குப்பம் கிராமத்தில் எருதுவிடும்  நிகழ்ச்சியானது வரும் 31ம் தேதி நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இதற்காக அரசிடம் அனுமதி பெற்றுதான் இந்த முன்னேற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டனர். மேலும் பார்வையாளருக்கான இன்சூரன்ஸ், காளைகளுக்கான இன்சூரன்ஸ் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

தற்போது விழா நடைபெறுவதற்காக இடத்தேர்வு ஆய்வு  நடைபெற்றது. இவ்விழா நடைபெறும் இடத்தில் இரயில்வே தண்டவாளம் உள்ளதால், ஏற்கனவே காளை ஒன்று இறந்துவிட்டதாகவும், ஆகையால் மீண்டும் அதேபகுதியில் அனுமதி வழங்கினால், அவை மிருகவதை மீறல்களுக்கு ஆளாகிவிடுமென கருதி, விழா நடத்த அனுமதி அளிக்கமாட்டோம் என்று திருப்பத்தூர் துணையாச்சியர்  வந்தனா கார்க் தெரிவித்துள்ளார். இதனை கண்டித்து அப்பகுதி மக்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் திருப்பத்தூர் சப் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, தங்களுக்கு அதே பகுதியில்தான் விழா நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்றும், வேறு இடங்களில் எருதுவிடும் விழாவினை நடத்தமாட்டோம் என்றும் கூறி, அரசு வழங்கிய ஆதார் அட்டை, குடும்ப அட்டை, பிறப்பு சான்றிதழ் உள்ளிட்டவற்றை கலெக்டரிடம் ஒப்படைத்து விடுவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Civilians ,sub collector ,Tirupattur , Bunting Festival, Tirupattur, Sub Collector, Siege, Public Name
× RELATED திருப்பத்தூர் மாவட்டத்தில் காலை 9...