சரத் சக்சேனா மறைவுக்கு ஐஎன்எஸ் தலைவர் இரங்கல்

புதுடெல்லி: நீண்ட காலமாக இந்திய பத்திரிகைகள் சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினராக இருந்த சரத் சக்சேனா மறைவுக்கு இந்த சங்கத்தின் தலைவர் சைலேஷ் குப்தா இரங்கல் தெரிவித்துள்ளார். இந்திய பத்திரிகைகள் சங்கத்தின் (ஐஎன்எஸ்) தலைவர் சைலேஷ் குப்தா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஐஎன்எஸ்.சில் நீண்டக் காலம் நிர்வாகக் குழு உறுப்பினராக இருந்தவர் சரத் சக்சேனா. இவர் சமீபகாலமாக நோய்வாய்ப்பட்டு சிகிச்சையில் இருந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். அவரது மறைவுக்கு ஐஎன்எஸ் சார்பில் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது இறுதிச்சடங்கு வரும் 2ம் தேதி டெல்லியில் நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : INS ,death ,Sarath Saxena ,demise ,Sarath Saxena INS , Sarath Saxena's death, INS president, condolences
× RELATED மாதவிலக்கின் போது சமைக்கும்...