செல்பி எடுப்பதற்காக துரத்தி வந்த ரசிகரின் செல்போனை பறித்து சென்ற சல்மான்

பனாஜி: தன்னை தொடர்ந்து துரத்தி வந்து செல்பி எடுக்க முயன்ற ரசிகரால் ஆத்திரம் அடைந்த பாலிவுட் நடிகர் சல்மான்கான், அவரது போனை பிடுங்கிச் சென்றார். பாலிவுட்டில் பிரபலமான நடிகர் சல்மான் கான். இவர் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்குவது உண்டு. மான் வேட்டையாடிய வழக்கில் படாதபாடு பட்டார். இந்நிலையில் நேற்று அவர் கோவாவுக்கு சென்றார்.  விமான நிலையத்தில் இருந்து வெளியே புறப்பட்டபோது அவருடன் செல்பி எடுக்க ரசிகர் ஒருவர் தொடர்ந்து வந்தார். ஆனால், அவரை கண்டுக்கொள்ளாமல் சல்மான் கான் சென்றுக் கொண்டிருந்தார். எனினும், அந்த ரசிகர் அவரை கெஞ்சிக் கொண்டு தொடர்ந்து வந்து செல்போனில் செல்பி எடுத்துக் கொள்ள முயன்றார். இதனால் ஆத்திரம் அடைந்த சல்மான் கான், திடீரென அந்த நபரின் செல்போனை பிடுங்கி, எடுத்துச் சென்று விட்டார்.

Advertising
Advertising

 இதனால், அந்த ரசிகர் விக்கித்து நின்றார். அவர் விமான நிலையத்தில் செயல்படும் தனியார் விமான நிறுவனம் ஒன்றின் ஊழியர் என்று தெரியவந்துள்ளது.  ஆனால், அவர் சல்மான் கான் மீது புகார் எதுவும் கொடுக்காததால், இது குறித்து வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்று விமான நிலைய போலீசார் தெரிவித்தனர். ரசிகர்களால் பிரபலமடைய வேண்டும் என்று நினைப்பவர்கள், தாங்கள் வளர்ந்த பின்னர் ரசிகர்களை துச்சமாக நினைக்கின்றனர் என்று ரசிகர் மன்றத் தலைவர் ஒருவர் வருத்தத்துடன் கூறினார்.

Related Stories: