×

நாசிக் அருகே கோர விபத்து அரசு பஸ், ஆட்டோ மோதி கிணற்றில் கவிழ்ந்ததில் 15 பேர் பலி

நாசிக்: மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டம், தேவ்லா அருகே கல்வன் என்ற இடத்தில் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை உள்ளது. நேற்றுக் காலை இங்கிருந்து சிவ்சாஹி பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்டுச் சென்றது. அந்த பஸ் மேஷி பாட்டக் என்ற இடத்தில் வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடியது. அப்போது எதிர்திசையில் வந்த  ஆட்டோ மீது மோதியது. இரு வாகனங்களும் மோதிக் கொண்ட வேகத்தில் சாலையோரத்தில் உள்ள கிணற்றில் விழுந்தன. இந்த கோர விபத்தில் 15 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கிணற்றில் விழுந்த பஸ்சுக்குள் சிக்கி பலர் காயமடைந்திருந்தனர். பெரும் போராட்டத்துக்கு பிறகு காயமடைந்த 18 பேர் மீட்கப்பட்டு உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர்.  ஆனால், காயமடைந்த பலரது நிலைமை மோசமாக இருந்ததால் அவர்கள் தீவிர சிகிச்சைக்காக நாசிக் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.


Tags : collision ,Nashik , Nashik, Accident, Government Bus, Auto, 15 killed
× RELATED புதுச்சேரியில் கார்- ஆம்புலன்ஸ்...