ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் ஏன்? அமைச்சர் விளக்கம்

சென்னை: வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கை: நிர்வாக காரணங்களுக்காக ஐஏஎஸ் அதிகாரிகளை பணி மாற்றம் செய்வது எல்லா ஆட்சிக்காலங்களிலும் நடந்து வரும் நிகழ்வு. அரசின் நல்லாட்சிக்கு அத்தாட்சியாக வேளாண்மை தொழில், மனிதவள மேம்பாடு, பொது சுகாதாரம் உள்ளிட்ட 10 துறைகளில் 2019க்கான மத்திய அரசின் நல் ஆளுமை குறியீட்டு அறிக்கையில் தமிழ்நாடு முதலாவதாக வந்துள்ளது. அதிகாரபூர்வ புள்ளி விவர அடிப்படையிலேயே முதலிடம் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

Advertising
Advertising

Related Stories: