பட்ஜெட் தொடர் சுமூகமாக நடக்க கட்சித்தலைவர்களுடன் சபாநாயகர் ஆலோசனை

புதுடெல்லி:  மத்திய அரசின் பட்ஜெட் பிப்.1ல் தாக்கல் செய்யப்படுகிறது. இதையொட்டி வரும் 31ம் தேதி நாடாளுமன்ற தொடர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்குகிறது. தொடர்ந்து பிப்ரவரி 11ம் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடைபெறுகிறது. இத்தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து அனைத்துக் கட்சி தலைவர்களுடன் மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா நாளை ஆலோசனை நடத்துகிறார். அன்று காலை மத்திய அரசும் பல்வேறு கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறது.  மறுநாள் மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவும் கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

Advertising
Advertising

Related Stories: