அனைத்து மாநிலங்களுடனும் சிறந்த ஒருங்கிணைப்பை மத்திய அரசு விரும்புகிறது: அமித்ஷா பேச்சு

ராய்ப்பூர்: சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் மத்திய மண்டல கவுன்சிலின் 22வது கூட்டம் நேற்று நடைபெற்றது.   மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் இடையே பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு தொடர்பாக ஏற்படும் பல்வேறு பிரச்னைகளை பரிமாறிக்கொள்ளும் வகையில் இந்த கவுன்சில் செயல்படுகிறது. இந்த கூட்டத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், சட்டீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ரவாத் மற்றும் தலைமை செயலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

காங்கிரஸ் மூத்த தலைவரும் மத்தியப் பிரதேச முதல்வருமான கமல்நாத் பேசுகையில், `‘மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையேயான சில பிரச்னைகள் இரு அரசுகள் இடையே மோதலை ஏற்படுத்துவதாகவும், இரு அரசுகள் சிறப்பாக இயங்கவும் தடையாக உள்ளது’’ என குறிப்பிட்டார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசுகையில், ‘‘ அனைத்து மாநிலங்களுடன் சிறப்பான முறையில் ஒருங்கிணைந்து செயல்பட மத்திய அரசு விரும்புகிறது. அனைத்து மாநிலங்களின் வளர்ச்சிக்கும் மத்திய அரசு தொடர்ந்து தனது ஆதரவை வழங்கும். மக்களது எதிர்பார்ப்புகள் அனைத்தையும் ஒவ்வொரு முறையும் நிறைவேற்றுவது சாத்தியமல்ல’’ என்றார்.

Related Stories: