கால் சென்டர் மோசடி: 3 இந்தியர்களுக்கு சிறை

வாஷிங்டன்: அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தை சேர்ந்த அமெரிக்க வாழ் இந்தியர்கள் முகமது காஜிம் மூமின், முகமது சோஜாப் மூமின், பலாக் குமார் படேல். இவர்கள் டேட்டா புரோக்கர்கள் மூலம் கிடைக்கும் தகவல்களைக் கொண்டு, அகமதாபாத்தில் செயல்படும் கால் சென்டர் உதவியுடன், வருவாய் துறை அதிகாரிகள் போல் மிரட்டி அமெரிக்கர்களை ஏமாற்றி 2.64 கோடி மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.  இதனை அமெரிக்க நிதித்துறையின் வரி நிர்வாகங்களுக்கான ஐஜி தலைமையிலான அமைப்பு விசாரித்தது. இந்த வழக்கில் 3 அமெரிக்க வாழ் இந்தியர்கள் உள்ளிட்ட 8 பேர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, குற்றங்களுக்கு ஏற்ப இவர்களுக்கு 6 மாதம் முதல் நாலே முக்கால் ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

Related Stories: