கார்-வேன் மோதியதில் 5 பேர் பலி : 19 பேர் படுகாயம்

ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம், சிவகாசி, அண்ணா காலனியை சேர்ந்தவர்கள் ஐயப்பன் (33), சுடலைமணி (30), முத்துகுமார் (31), அந்தோணிராஜ் (30) மற்றும் பிரபு (30). நண்பர்களான 5 பேரும் காரில் குற்றாலத்திற்கு சுற்றுலா சென்றனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு நேற்று முன்தினம் இரவு ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். காரை சுடலைமணி ஓட்டி வந்தார். நேற்று அதிகாலை 3 மணியளவில் ராஜபாளையம் - தென்காசி சாலையில் கடமன்குளம் பாலம் அருகே வந்தபோது எதிரே மதுரையில் இருந்து செங்கோட்டைக்கு சென்ற வேன், கார் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி சுக்கலாக நொறுங்கியது. காரில் இருந்த ஐயப்பன், சுடலைமணி, முத்துகுமார் மற்றும் அந்தோணிராஜ் ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  படுகாயம் அடைந்த பிரபு மருத்துவமனையில் உயிரிழந்தார். வேனில் இருந்த 19 பேர் படுகாயமடைந்தனர்.


Tags : 5 killed, 19 injured in car-van collision
× RELATED ராஜபாளையத்தில் கோர விபத்து: கார்-வேன்...