சிஏஏ எதிர்ப்பு போராட்டத்துக்கு நிதி விவகாரம்: குற்றச்சாட்டுகள் போலியானது, ஆதாரமற்றது: பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அறிக்கை

சென்னை: பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா தேசிய துணைத் தலைவர் எம்.முஹம்மது அலி ஜின்னா வெளியிட்ட அறிக்கை: சிஏஏ போராட்டத்தை தூண்டுவதற்கு பாப்புலர் ப்ரண்டின் நிதி உதவி என்பதை மறுப்பதுடன் வன்மையாக கண்டிக்கிறோம். சிஏஏ போராட்டத்திற்கு சற்று முன்னதாக பாப்புலர் ப்ரண்டின் கணக்குகளில் இருந்து 120 கோடி ரூபாய் பரிமாற்றம் செய்யப்பட்டது என்ற குற்றச்சாட்டு முற்றிலும் ஆதாரமற்றது. இந்த குற்றச்சாட்டுகளை சுமத்தும் நபர்கள் அவற்றை நிரூபிக்க வேண்டும். 2017ல் இடம்பெற்ற ஒரு கட்டண பரிமாற்றத்தை 2019 சிஏஏ போராட்டத்திற்கான நிதி அளிப்பாக  கூறுவது முற்றிலும் அபத்தமானது.

பாப்புலர் ப்ரண்டின் காஷ்மீர் பிரிவுக்கு பண பரிமாற்றம் செய்யப்பட்டதாக மற்றொரு குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது. ஜம்மு மற்றும் காஷ்மீரில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவிற்கு எந்த கிளையோ பிரிவோ கிடையாது என்பது வெளிப்படையானது. காஷ்மீரில் பாப்புலர் ப்ரண்ட் ஏதேனும் கிளை செயல்படுவதை நிரூபிக்குமாறு இந்த பெயர் குறிப்பிடப்படாத ஆதாரங்களுக்கு நாங்கள் சவால் விடுகிறோம். மலிவான பிரசாரத்தை மேற்கொள்ளும் சக்திகளால் பாப்புலர் ப்ரண்ட் பணிந்து விடாது.

Related Stories: