டோல்கேட்டில் கூடுதலாக 5 வசூல் 20,000 இழப்பீடு தர நுகர்வோர் கோர்ட் உத்தரவு

நெல்லை: தூத்துக்குடி சென்று வர 5 சுங்கக் கட்டணம் அதிகமாக வசூலித்த வாகைக்குளம் டோல்கேட் நிர்வாகம் 20,000 இழப்பீடு வழங்க நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. நெல்லை மாவட்டம், வீரவநல்லூரைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் பிரபாகரன் (42). இவர் கடந்த ஆண்டு மே 4ம் தேதி நெல்லையில் இருந்து தூத்துக்குடிக்கு காரில் சென்றார். அப்போது தூத்துக்குடி வாகைக்குளம் டோல்கேட்டில் 90 கட்டணம் செலுத்தி தூத்துக்குடி சென்று வர ரசீது பெற்றுள்ளார். நெல்லை - தூத்துக்குடி சென்று வருவதற்கு  ₹85 மட்டுமே கட்டணமாக வசூல் செய்யப்படும் என அறிவிப்பு பலகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் வக்கீல் பிரபாகரிடம் ₹90 கட்டணம் வசூல் செய்யப்பட்டுள்ளது. இதனால் கூடுதலாக ஐந்து ரூபாய் வசூல் செய்தது முறையற்றது என குறிப்பிட்டு பிரபாகர் நெல்லை நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி தேவதாஸ், உறுப்பினர்கள் சிவமூர்த்தி, முத்துலட்சுமி ஆகியோர் டோல்கேட் நிர்வாகம் கூடுதலாக 5 வசூல் செய்தது முறையற்றது. அதனால் மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு 15 ஆயிரமும், வழக்கு செலவுக்கு 5 ஆயிரமும், மனுதாரரிடம் கூடுதலாக வசூல் செய்த தொகை 5ம் சேர்த்து மொத்தம் ரூ,20,005 டோல்கேட் நிர்வாகம் வழங்க உத்தரவிட்டனர். இந்தத் தொகையை ஒரு மாதத்திற்குள் கொடுக்க தவறினால் டோல்கேட் நிர்வாகம்  6 சதவீத வட்டியும் சேர்த்து கொடுக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

Related Stories: