தெற்கு ரயில்வேக்கு புதிய தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி

சென்னை: தெற்கு ரயில்வேக்கு புதிய தலைமை மக்கள் தொடர்பு அதிகாரியாக  குகனேசன் பொறுப்பேற்றுள்ளார். இதற்கு முன்பு தலைமை மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றி வந்த தனஞ்ஜெயன் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் இயக்குனராக பதவி வகிப்பார். புதிதாக பொறுப்பேற்றுள்ள குகனேசன் சென்னை லயோலா கல்லூரியில் முதுகலை பட்ட படிப்பை முடித்தார். இவர் 2009ம் ஆண்டு இந்தியன் ரயில்வே சார்பில் நடத்தப்பட்ட சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்றார். இதையடுத்து சென்னை, திருவனந்தபுரம், மதுரை, சேலம் கோட்டங்களில் பணியாற்றினார். குகனேசன் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரியாக பொறுப்பேற்பதற்கு முன்பு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் இயக்குனராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertising
Advertising

Related Stories: