புதிதாக விண்ணப்பித்த 1,79,139 மனுக்களில் 90,388 பேருக்கு குடும்ப அட்டை : அமைச்சர் அறிவிப்பு

சென்னை: .சென்னை சேப்பாக்கம், எழிலகத்தில் உள்ள மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அதிகாரிகளுடன் மாநில அளவிலான கலந்தாய்வு கூட்டம், உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தலைமையில் நேற்று நடந்தது.பின்னர் அமைச்சர் காமராஜ் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் தற்போது, 2 கோடியே 2 லட்சத்து  30 ஆயிரத்து 886 குடும்ப அட்டைகள் புழக்கத்தில் உள்ளன.  மேலும், புதிய குடும்ப அட்டைகள் கோரி பெறப்பட்ட 1 லட்சத்து 79 ஆயிரத்து 139 மனுக்களில் 1 லட்சத்து 38 ஆயிரத்து  838  மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, 90 ஆயிரத்து 388 மனுக்கள் தகுதியின் அடிப்படையில் அச்சிட்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Advertising
Advertising

சரியான தகவல்கள், ஆவணங்கள் சேர்க்கப்படாத 48 ஆயிரத்து 450 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மின்னணு குடும்ப அட்டைகளுடன் கைப்பேசி எண்ணை இணைக்கும் பணி 99.51 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் 1,112 போட தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ்  கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: