அண்ணா நினைவுநாள் இபிஎஸ், ஓபிஎஸ் தலைமையில் பிப்.3ல் அஞ்சலி

சென்னை: அண்ணா நினைவுநாளையொட்டி பிப்ரவரி 3ம் தேதி இபிஎஸ், ஓபிஎஸ் தலைமையில் அண்ணா சமாதியில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்த உள்ளனர். இதுகுறித்து அதிமுக தலைமை கழகம் சார்பில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அண்ணாவின் 51வது நினைவு நாளான பிப்ரவரி 3ம் தேதி (திங்கள்) காலை 10 மணி அளவில், சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடத்தில், அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி  ஆகியோர் தலைமையில், தலைமைக் கழக நிர்வாகிகளும், அமைச்சர் பெருமக்களும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்த உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertising
Advertising

Related Stories: