×

டெல்லியில் தமிழர் பகுதியில் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் பிரசாரம்

சென்னை: டெல்லி சட்டமன்ற தேர்தலில் பிரசாரம் மேற்கொள்ளும் 5 தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் பட்டியலை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்அழகிரி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: டெல்லி சட்டமன்றத் தேர்தலில் தமிழர்கள் வாழ்கின்ற பகுதிகளில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக பிரசாரம் செய்வதற்காக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். எஸ். விஜயதரணி, எம்.எல்.ஏ., செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், முன்னாள் எம்எல்ஏ டி.என்.முருகானந்தம், பொன்.கிருஷ்ணமூர்த்தி, எஸ்.எம்.இதாயத்துல்லா ஆகிய 5 பேரும் உடனடியாக டெல்லி சென்று பிரசாரத்தில் ஈடுபட வேண்டும்.


Tags : Tamil Nadu ,Congress ,executives campaign ,Congress Executives Campaign , Tamil Nadu Congress executives campaign , Tamil Nadu
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...