ஒரே நாடு ஒரே ரேஷன்’ திட்டம் 1ம் தேதி முதல் தமிழகத்தில் அமல் : அமைச்சர் காமராஜ் அறிவிப்பு

சென்னை: ஒரே நாடு ஒரே ரேஷன்’’ திட்டம் வருகிற 1ம் தேதி முதல் தமிழகத்தில் நடைமுறைக்கு வருகிறது என்று அமைச்சர் காமராஜ் கூறினார். உணவு அமைச்சர் காமராஜ் நேற்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது: ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் என்பது, தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் ஒரு அங்கம். எங்கேயாவது மக்களுக்கு ரேஷன் பொருள் கிடைக்காமல், அவர்கள் பட்டினியாக இருக்க கூடாது என்ற அடிப்படையில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. முதலில், மாநிலங்களுக்குள் எங்கு வேண்டுமானாலும் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிமுகப்படுத்தப்படும். 2வதாக, மாநிலம் விட்டு மாநிலம் ரேஷன் பொருள் பெற்றுக்கொள்ளும் திட்டம் நடைமுறைக்கு வரும்.

Advertising
Advertising

தமிழகத்தில் வருகிற 1ம் தேதி முதல் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்த போகிறோம். வருங்காலத்தில் மற்ற மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படும். பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க, 3 முதல் 6 சதவீதம் வரை கூடுதல் பொருட்கள் ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படும். முதல் ஒன்று, இரண்டு மாதங்களில் ஒரு கடைக்கு எவ்வளவு தேவை என்பது தெரிந்துவிடும். அதற்கு பிறகு அது சரியாகி விடும். தமிழகத்தில் சேமிப்பு கிடங்கு 22 லட்சம் மெட்ரிக் டன் கொள்ளவு உள்ளன. போதுமான அளவுக்கு நெல் இருப்பு வைக்க முடியும். 1,292 நேரடி கொள்முதல் நிலையங்கள் உள்ளது. 1,58,000 நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அமைச்சர் காமராஜ் கூறினார்.

Related Stories: