லக்னோ ராணுவ கண்காட்சியில் அதிநவீன ஏவுகணைகள் காட்சிக்கு வைக்கப்படும்: ஐரோப்பிய நிறுவனம் அறிவிப்பு

புதுடெல்லி: உபி தலைநகர் லக்னோவில் பிப்.5ம் தேதி முதல் 9ம் தேதி வரை ‘ராணுவ கண்காட்சி - 2020’ நடைபெற உள்ளது. இதில், பல்வேறு சர்வதேச நிறுவனங்கள் மற்றும் இந்திய நிறுவனங்களின் ஆயுதங்கள், ராணுவ தளவாடங்கள்  காட்சிக்கு வைக்கப்படும். இது தொடர்பாக ஐரோப்பியாவை சேர்ந்த ஏவுகணை தயாரிப்பு நிறுவனமான எம்பிடிஏ வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஏடிஜிஎம்-5 என்ற பீரங்கி எதிர்ப்பு  ஏவுகணை, கப்பல் எதிர்ப்பு ஏவுகணையான எக்ஸோசெட் எம்எம்40 பி3 போன்றவையும், நவீன தொழில்நுட்ப கருவிகளும் இந்த கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படும். இது தவிர தரையில் இருந்து வானில் உள்ள இலக்கை தாக்கும் ஏவுகணையும் காட்சிப்படுத்தப்படும்,’ என்று கூறப்பட்டுள்ளது.

Advertising
Advertising

Related Stories: