மைசூரு நாகரஹொலே வனவிலங்கு பூங்காவில் கருஞ்சிறுத்தை

மைசூரு: கர்நாடகாவின் மைசூரு மாவட்டம் நாகரஹொலே தேசிய வனவிலங்கு பூங்காவில் பலவிதமான வனவிலங்குகள் இருப்பதால் அவைகளை பார்த்து ரசிக்க தினமும் சுற்றுலா பயணிகள் அதிக எண்ணிக்கையில் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் சம்பவத்தன்று காலை சுற்றுலா பயணிகள் தேசிய வனவிலங்கு பூங்காவை சுற்றி பார்த்துக் கொண்டு இருந்தனர். அப்போது திடீர் என்று கருஞ்சிறுத்தை ஒன்று  சுற்றுலா பயணிகளின் கண்ணில் தென்பட்டது. இதை பார்த்து மகிழ்ச்சியடைந்த சுற்றுலா பயணிகள் அதை புகைப்படம் பிடித்து சமூக, இணைய தளங்களில் வெளியிட்டனர். இது தற்போது வைரலாக பரவி வருகிறது. பொதுவாக கருஞ்சிறுத்தையை காண்பது அரிது. எப்போதாவது இது போன்ற அபூர்வ சம்பவம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertising
Advertising

Related Stories: