செல்போனில் ஆபாசமாக பேசி மாணவிக்கு பாலியல் தொல்லை: வாலிபருக்கு வலை

தண்டையார்பேட்டை: செல்போனில் ஆபாசமாக பேசி, மாணவிக்கு பாலியல் தொல்ைல கொடுத்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை பாரிமுனை, மண்ணடி, அங்கப்பன் நாயக்கன் தெருவை சேர்ந்தவர் சதாம் உசேன் (30). இவர், அதே பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவியின் செல்போன் எண்ணுக்கு அடிக்கடி ஆபாச படங்களை அனுப்பியும், பாலியல் ரீதியாக ஆபசமாக பேசியும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து தனது பெற்றோரிடம் மாணவி தெரிவித்துள்ளார். இதுகுறித்து வடக்கு கடற்கரை போலீசில் மாணவியின் பெற்றோர் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். பின்னர் இந்த வழக்கு துறைமுகம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. போலீசார், போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சதாம் உசேனை தேடி வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: