12 ஆடுகளை திருடிய ஆசாமி பிடிபட்டார்

புழல்: புழல், காவாங்கரை திருமலை நகர் 19வது தெருவை சேர்ந்தவர் பாண்டியன் (52). இவர், தனது வீட்டில் 20க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில், கடந்த 24ம் தேதி இவரது கொட்டகையில் இருந்து 12 ஆடுகள் காணாமல் போனது தெரிந்தது. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் இதுபற்றி புழல் காவல் நிலையத்தில் பாண்டியன் புகாரளித்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் புழல் ஜிஎன்டி சாலை சிக்னல் அருகே சந்தேகத்துக்கு இடமான முறையில் சுற்றித்திரிந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது, அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனால், அவரை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தபோது, செங்குன்றம் கரிகால சோழன் நகர் 1வது தெருவை சேர்ந்த மனோகர் என்ற மனோஜ் (40) என்பதும், திருமலை நகரில் 12 ஆடுகளை திருடியவர் என்பதும் தெரிந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Advertising
Advertising

Related Stories: