வாலிபருக்கு கத்திக்குத்து

பெரம்பூர்: வியாசர்பாடி ஏரிக்கரை பகுதியை சேர்ந்த செல்வராஜ் (19), நேற்று முன்தினம் இரவு ஓட்டேரி ஸ்டாரன்ஸ் சாலையில் நடந்து சென்றபோது, அங்கு வந்த 2 மர்ம நபர்கள், இவரை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பினர். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், ரத்த வெள்ளத்தில் கிடந்த செல்வராஜை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். கோஷ்டி மோதலில் கத்திக்குத்து சம்பவம் நடந்திருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: