கடலூர் வெள்ளி கடற்கரையில் தூய்மை பணி

கடலூர்: கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் கடலூர் வெள்ளிக் கடற்கரையில் தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டது. தூய்மைப் பணியை கல்லூரி முதல்வர் உலகி தொடங்கி வைத்தார். கடலோரப் பாதுகாப்புக் குழும கடலூர் பிரிவு உதவி ஆய்வாளர் சிவகுருநாதன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, கடற்கரையைப் தூய்மையாக பேணவேண்டியதன் அவசியம் குறித்தும், சமூகப் பணிகளில் மாணவர்களுடைய பங்கேற்பின் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைத்தார். தேவனாம்பட்டினம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்.

நமச்சிவாயம் மாணவர்களின் தூய்மைப் பணியை வாழ்த்திப் பேசினார். இதில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் தூய்மை பணியில் பங்கேற்று வெள்ளிக் கடற்கரையில் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தனர். 30க்கும் மேற்பட்ட சணல் பைகளில் மாணவர்கள் குப்பைகளைச் சேகரித்தனர். வெள்ளிக் கடற்கரைத் தூய்மைப் பணிக்கான ஏற்பாடுகளை பெரியார் அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு ஒன்றின் திட்ட அலுவலர் பேராசிரியை விஜயலட்சுமி

செய்திருந்தார்.

Related Stories: