நடிகர் ரஜினிக்கு எதிராக வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கு வாபஸ்: மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்

சென்னை: நடிகர் ரஜினிக்கு எதிராக 2014ல் தொடரப்பட்ட வழக்கை வருமானவரித்துறை வாபஸ் பெற்றது. வழக்கை திரும்ப பெற அனுமதித்து வருமானவரித்துறை மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ரஜினிகாந்த் 2002 முதல் 2005 ஆண்டு வரை முறையாக வருமான வரி செலுத்தவில்லை எனக் கூறி 66,22,436 ரூபாய் அபராதம் விதித்து வருமானவரித் துறை நோட்டீஸ் அனுப்பியது. ரூ.66.22 லட்சம் அபராதம் விதித்து வருமானவரித்துறை அனுப்பிய நோட்டீசை மேல்முறையீட்டு தீர்ப்பாயம் ரத்து செய்தது. மேல்முறையீட்டு தீர்ப்பாயம் நோட்டீசை ரத்து செய்ததை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வருமானவரித்துறை வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சுரேஷ் குமார் அமர்வில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ரஜினிக்கு எதிராக 2014ல் தொடரப்பட்ட வழக்கை வருமான வரித்துறை வாபஸ் பெற்றது. இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் ஒரு கோடி ரூபாய் அல்லது அதற்கு குறைவாக உள்ள அபராதத் தொகைக்காக வழக்கு தொடருவது இல்லை என்றும் நிலுவையில் உள்ள வழக்குகளை திரும்பப் பெறுவது என்றும் நேரடி வரிகள் வாரியம் அறிவித்தது.

இதன்படி வழக்கை திரும்பப் பெற அனுமதிக்க வேண்டும் என வருமானவரித்துறை தெரிவித்ததையடுத்து, நீதிபதிகள் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்தனர்.

Related Stories: