×

அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்கும் விவகாரம்: 5 அமைச்சர்கள் கொண்ட குழு தலைமை செயலாளருடன் ஆலோசனை

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக  பிரிப்பது தொடர்பாக அமைக்கப்பட்ட 5 அமைச்சர்கள் கொண்ட குழுவினர் தலைமை செயலாளருடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தின் பொறியியல் கல்லூரிகளை ஒருங்கிணைத்து வழிநடத்தும் அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்கும் விவகாரம் தொடர்பாக  5 பேர் கொண்ட அமைச்சர்கள் குழுவை தமிழக அரசு நியமித்துள்ளது. அதில் செங்கோட்டையன், தங்கமணி,  ஜெயக்குமார்,  சி.வி.சண்முகம்,  அன்பழகன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவினர் தற்போது தமிழக தலைமைச் செயலாளருடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக  பிரிப்பது குறித்த ஒரு ஆலோசனையை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களை உலக அளவில் மேம்படுத்த உயர் சிறப்பு கல்வி நிறுவனம் என்ற திட்டத்தை மத்திய அரசு 2017ம் ஆண்டு கொண்டு வந்தது. இந்த திட்டத்தின்படி 10 உயர்கல்வி நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு, அவற்றின் மேம்பாட்டுக்கு ரூபாய் 1000 கோடி அளிக்கப்படும்.

இந்த திட்டத்தின் கீழ் தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகம் தேர்வானது. அதே நேரம் இடஒதுக்கீடு உட்பட சில காரணங்களால் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்ய 5 அமைச்சர்கள் அடங்கிய குழுவை அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது. அந்த குழு இன்று தலைமை செயலாளருடன் முக்கிய ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். இதன்  பிறகு முக்கியமான முடிவுகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது. அதாவது இன்ஸ்டிடியூட் ஆப் எமினென்ஸ் சார்ந்த ஒப்புதலை தமிழக அரசு, மத்திய அரசுக்கு கொடுக்கிறதா? இதனால் இன்ஸ்டிடியூட் ஆப் எமினென்ஸ் என்ற அந்தஸ்து கிடைக்கிறதா என்பது குறித்த ஒரு அறிவிப்பும் கிடைக்கப்பெறலாம். அதேபோல் அண்ணா பல்கலைக்கழகம் இரண்டாக பிரிக்கப்படுகிறதா? அந்த பெயரில் ஏதேனும் மாற்றங்கள் இருக்கிறதா? என்பது குறித்து ஏதேனும் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Tags : Anna University ,Committee ,Chief Secretary ,Ministers ,consultation , Anna University, Affairs, 5 Ministers, Committee, Chief Secretary, Consulting
× RELATED பதிவாளர் நியமனம் தொடர்பாக அண்ணா...