தஞ்சை பெரிய கோவிலில் குடமுழக்கு விழா: பாதுகாப்பு கருதி போலீசார் வெடிகுண்டு சோதனை

தஞ்சை: தஞ்சை பெரிய கோவிலில் குடமுழக்கு விழாவை முன்னிட்டு, பக்தர்களின் பாதுகாப்பு கருதி போலீசார் வெடிகுண்டு சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தஞ்சை பெரிய கோவிலில் வரும் பிப்ரவரி 5ம் தேதி குடமுழக்கு நடைபெறவுள்ளது. குடமுழக்கை தமிழில் நடத்தப்பட வேண்டுமென பல்வேறு தரப்பிலும் வலியுறுத்தபட்டுவருகிறது. இதனிடையே மற்றொரு தரப்பில் ஆகம விதிப்படி சமஷ்கிருதத்தில்தான் நடத்தப்படவேண்டும் என்று வாதிடப்பட்டது. இந்நிலையில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலில் குடமுழக்கு விழா 23 ஆண்டுகளுக்கு பின்னர் வரும் பிப்ரவரி 5ம் தேதி நடைபெறவுள்ளது என்றும், சைவ வழிபாட்டு தளங்களில் தமிழ்மறை அடிப்படையிலேயே குடமுழக்கு நிகழ்வினை நடத்தப்படவேண்டுமென்றும், குறிப்பிட்டிருந்தது.

2 ஆண்டுகளுக்கு முன் விழுப்புரம் சுந்தரம் கோவிலில் குடமுழுக்கு விழா,  தொடர்பாக வழக்கில் விழாவை தமிழில், தமிழ் மறைகளை ஓதி நடத்துமாறு தனிநீதிபதி உத்தரவிட்டதாக கூறப்பட்டிருந்த மனுதாரர் தமிழர்களின் தனி அடையாளமான தஞ்சை பெரிய கோவிலின் குடமுழுக்கு விழாவை தமிழில், தமிழ் சைவ ஆகமங்களான தேவாரம், திருவாசகம் ஆகியவற்றை ஓதி நடத்த உத்தரவிடவேண்டுமென கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி துரைசாமி, ரவீந்திரன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்து சமைய அறநிலையத்துறை தரப்பில் தமிழ் மொழிக்கும், சமஸ்கிருத மொழிக்கும் சமமான மதிப்பே வழங்கப்படுகிறது என்றும், குடமுழுக்கு விழாவை தமிழிலும் சமஸ்கிருதத்திலும் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டது.

இவ்வழக்கை பிராமண பத்திரமாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை புதன்க்கிழமைக்கு ஒத்திவைத்தனர். தஞ்சை பெரிய கோவிலில் குடமுழுக்கு விழா நடைபெறுவதை முன்னிட்டு பாதுகாப்பு கருதி வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது. பிப்ரவரி 5ம் தேதி குடமுழக்கு விழா நடைபெற உள்ள நிலையில், பந்தல் அமைத்தல், பக்தர்கள் வந்து செல்வதற்கான தடுப்பு கட்டைகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.  அசம்பாவிதங்களை தவிர்க்கும் நோக்கில் மோப்பநாய்களை கொண்டும், மெட்டல் டிடெக்டர் கருவிகளை கொண்டும், கோவிலின் பல்வேறு பகுதிகளிலும் வெடிகுண்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் தீவிர சோதனைக்கு பின்னரே, உள்ளே அனுமதிக்கப்பட்டுவருகின்றன.

Related Stories: