குஜராத் கலவரம் தொடர்பான வழக்கு: 14 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: குஜராத் கலவரம் தொடர்பான வழக்கு ஒன்றில் 14 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2002ம் ஆண்டு குஜராத்தை சேர்ந்த கரசேவர்கள் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். கோத்ரா ரயில் நிலையம் அருகே ரயில் வந்தபோது 2 பெட்டிகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இதில், கரசேவகர்கள் 59 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து குஜராத்தில் கலவரம் வெடித்தது. இதில், சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். சர்தார்புராவில் நடந்த கலவரத்தில், சிறுபான்மை சமூகத்தினர் வசிக்கும் பகுதியில் ஒரு கும்பல் கலவரத்தில் ஈடுபட்டது. உயிருக்கு பயந்து, அப்பகுதி மக்கள் இப்ராஹிம் ஷேக் என்பவர் வீட்டில் பதுங்கியிருந்த நேரத்தில், கலவரக் கும்பல் அந்த வீட்டின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாகக் கூறப்படுகிறது.

அதில், 22 பெண்கள் உள்பட 33 பேர் எரித்துக் கொல்லப்பட்டார்கள். இது தொடர்பாக உச்சநீதிமன்ற மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தியது. கோத்ரா ரயில் எரிப்புக்குப் பிந்தைய வன்முறைகள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வு குழு நடத்திய 9 வழக்குகளில் இதுவும் ஒன்று ஆகும். சர்தாபுரா படுகொலை தொடர்பான வழக்கில் 76 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 2 பேர் விசாரணையின் போது உயிரிழந்த நிலையில், ஒருவர் மைனர் என்பதால் விடுவிக்கப்பட்டார். எஞ்சிய 73 பேர் மீது 2009-ம் ஆண்டு ஜூன் மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் கீழ்நீதிமன்றம் 42 பேரை விடுதலை செய்தது.

31 பேரை குற்றவாளிகள் என தீர்ப்பளித்தது. இதில் கோட்னானிக்கு 28 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. பாபு பஜ்ரங்கிக்கு ஆயுட்கால சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், 8 பேருக்கு 31 ஆண்டுகளும், 22 பேருக்கு 24 ஆண்டுகளும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து குஜராத் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. ஆனால் கீழ்நீதிமன்ற தீர்ப்பை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. பின்னர் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் 31 பேரில் 14 பேர் விடுவிக்கப்பட்டு, 17 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது.  ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து 17 பேர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், ஆயுள் தண்டனை கைதிகள் 14 பேர் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது 14-பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ஜாமீன் காலத்தில் ஆன்மீக மற்றும் சமூகசேவையில் ஈடுபடும்படி உத்தரவிட்டுள்ளது. 14 பெரும் குஜராத் செல்லக்கூடாது. மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர், ஜபல்பூரில் தங்கியிருக்க வேண்டும், ஜாமீன் காலத்தில் ஆன்மீக, சமூக சேவை செய்ய வேண்டும் என்ற நிபந்தனைகளின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் ஜாமீன் அளித்துள்ளது.

Related Stories: