×

பனிக்கட்டி ஹோட்டல்

நன்றி குங்குமம் முத்தாரம்

ஸ்வீடனின் வடக்கில் உள்ள ஜுக்காஸ்ஜார்வி கிராமத்தில் வீற்றிருக்கிறது உலகின் முதல் பனிக்கட்டி ஹோட்டல். குளிர்காலத்தில் மட்டும் திறந்திருக்கும் இந்த ஹோட்டல், கோடை காலம் ஆரம்பித்த உடன் உருக ஆரம்பித்துவிடும். அதனால் ஒவ்வொரு வருடமும் குளிர்காலம் தொடங்கும்போது இந்த ஹோட்டலை மறுகட்டமைப்பு செய்வார்கள்.

கடந்த வருடம் இந்த ஹோட்டலுக்கு விசிட் அடித்தவர்கள் இந்த வருடமும் வந்தால் ஹோட்டல் வேறுவிதமாக இருக்கும். ஹோட்டலில் அறை முதல் அனைத்து அலங்காரங்களும் பனிக்கட்டியால் உருவானவை. ஹோட்டலுக்கு அருகிலிருக்கும் டோர்ன் நதியிலிருந்து பனிக்கட்டிகள் எடுத்துவரப்படுகின்றன. ஹோட்டல் உருகி அதே  நதியில் கலந்துவிடுகிறது. ஹோட்டல் திறந்திருக்கும் நாட்களில் எப்போதுமே ஹவுஸ்ஃபுல்.




Tags : Ice Hotel , Ice Hotel
× RELATED பிரபல நிறுவனங்கள் தயாரிக்கும்...