டைப்ரைட்டர் ஓவியர்!

நன்றி குங்குமம் முத்தாரம்

நம் கைகளில் கம்ப்யூட்டரின் கீபோர்டும் ஸ்மார்ட்போனும் தவழ ஆரம்பித்த பிறகு டைப்ரைட்டர் என்ற ஒரு விஷயமே மறந்துபோய்விட்டது. இப்போது டைப்ரைட்டரை பலரது ஞாபகத்துக்குக் கொண்டுவந்ததோடு அதில் அசாத்தியமான சாதனையைச் செய்து அசத்தியிருக்கிறார் ஜேம்ஸ் குக் என்ற இளைஞர். ஆம்; டைப்ரைட்டரிலே இவர் ஓவியம் வரைகிறார்.

கட்டடக்கலை பயின்று வரும் இவர், வேடிக்கையாக டைப்ரைட்டரில் வரைந்து பார்த்திருக்கிறார். முயற்சி கை கூட மனித உருவங்கள், கட்டடங்களின் மாதிரி வடி வமைப்பு, விலங்குகள் என பலவற்றை தத்ரூபமாக டைப்ரைட்டரிலேயே வரைகிறார். கருப்பு, சிவப்பு என்ற இரண்டு வண்ணங்களை மட்டுமே ஓவியம் வரைய பயன்படுத்துகிறார்.

பெயிண்ட், பிரஷ் என ஓவியம் வரையத் தேவையான மூலப்பொருட்கள் எதையும் இவர் பயன்படுத்துவதில்லை. ஒரு ஓவியம் வரைய இருபது முதல் முப்பது மணி நேரம் ஆகிறதாம். ஒரு காலத்தில் டைப் கற்றுக்கொள்ள டைப்ரைட்டர் சென்டரை நோக்கி ஒரு கூட்டம் படையெடுத்தது. இனி டைப்ரைட்டரில் ஓவியம் வரையக் கற்றுக்கொள்ள ஒரு கூட்டம் படையெடுக்கும் நாள் தொலைவில் இல்லை.

Related Stories: