பச்சை நாய்க்குட்டி!

நன்றி குங்குமம் முத்தாரம்

அமெரிக்காவின் வடக்கு கரோலினாவைச் சேர்ந்த ஒரு தம்பதி வெள்ளை நிற ஷெப்பர்டு இன நாயை வளர்த்து வந்தனர். அதன் பெயர் ஜிப்ஸி. கர்ப்பமடைந்த அந்த நாய் கடந்த வாரம் எட்டு குட்டிகளை ஈன்றெடுத்தது. அந்த எட்டு குட்டிகளும் இப்போது நலமாக உள்ளன. இதில் என்ன ஸ்பெஷல் என்கிறீர்களா? எட்டு குட்டிகளில் நான்காவதாக பிறந்த குட்டி பச்சை வண்ணத்தில் பிறந்திருக்கிறது. இப்படியொரு வண்ணத்தில் நாய் பிறப்பது இதுவே முதல்முறை.

அதிர்ச்சியும் ஆச்சர்யமும் அடைந்த அந்த தம்பதியினர் நாய்க்குட்டியை விலங்குகள் நல மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல, கால்நடை மருத்துவர்களும் நாய்க்குட்டியின் வண்ணத்துக்கான காரணம் தெரியாமல் விழிபிதுங்கிப் போயிருக்கின்றனர். இப்போது அந்த நாய்க்குட்டிக்கு ஹல்க் என்று பெயர் வைத்துள்ளனர். ஹல்க் என்பது புகழ்பெற்ற சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தின் பெயர். ஹல்க்கின் நிறமும் பச்சை.

Related Stories: