×

மெகா ராக்கெட்

நன்றி குங்குமம் முத்தாரம்

இதோ தயாராகிவிட்டது நாசாவின் மெகா ராக் கெட். விண்வெளித் துறையில் நிகழும் மிகப்பெரும் பாய்ச்ச லாக இந்த ராக்கெட்டைக்  கருதுகின்றனர்.
111.25 மீட்டர் உயரமும், 8.4 மீட்டர் விட்டமும் கொண்ட இதற்கு சுமார் 900 மில்லியன் டாலர் செலவாகி யிருக்கிறது. நிலா, வியாழன் உட்பட விண்வெளியில் விரைவில் வட்டமிட்டு பல அரிய தகவல்களை பூமிக்குக் கொண்டு வந்து சேர்க்கப்போகிறது இந்த மெகா ராக்கெட்.

2011-லிருந்து ஆரம்பிக்கட்ட இதன் வேலை இப்போது தான் முடிந்திருக்கிறது. இந்த ராக்கெட்டின் புகைப்படம் வெளியான சில மணி நேரங் களிலேயே இணையத்தில் டிரெண்டாகிவிட்டது. ராக்கெட்டை விண்வெளியில் ஏவப்போகும் நாள் இன்னும் திட்டவட்டமாக அறிவிக்கப்படவில்லை.

ஸ்பேஸ் எக்ஸ், ப்ளூ ஆரிஜின் போன்ற நிறுவனங்கள் அதிக திறன் வாய்ந்த ராக்கெட்டுகளை உருவாக்கும் போது மெகா ராக்கெட் திட்டத்தை கைவிடுவதாக அறிவித்திருந்தது நாசா என்பது குறிப்பிடத்தக்கது.Tags : Mega Rocket
× RELATED மனித கம்ப்யூட்டர்