மலைரயில் பாதையில் பயன்படுத்த பிளாஸ்டிக் ஸ்லீப்பர் கட்டைகள்: அமெரிக்காவில் இருந்து வரவழைக்கப்பட்டவை

மேட்டுப்பாளையம்: நீலகிரி மலைரயில் உலகப்புகழ் பெற்ற ஒன்று. ஆண்டுதோறும் இதில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரை பயணித்து மகிழ்ந்து வருகின்றனர். குறிப்பாக கோடை சீசன் சமயங்களில் இந்த ரயிலில் பயணம் செய்ய காத்திருப்போர் எண்ணிக்கை அதிகளவில் இருக்கும்.உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மலைரயிலில் பயணிக்க ஆர்வத்துடன் ஊட்டி வருகின்றனர்.மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரையிலான மலைரயில்பாதையில் மரம் மற்றும் இரும்பிலான ஸ்லீப்பர் கட்டைகள் தண்டவாளத்தில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது முதல் முறையாக அமெரிக்காவில் இருந்து காம்போஷிட் எனும் ஸ்லீப்பர் கட்டைகள் குன்னூர் கொண்டு வரப்பட்டுள்ளது.

காம்போஷிட் என்பது அதிகளவில் பிளாஸ்டிக் கழிவவுகளையும் வேறு சில பொருட்காளாலும் உருவானது.அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட 200 காம்போஷிட் ஸ்லீப்பர் கட்டைகள் லாரிகள் மூலம் குன்னூர் எடுத்து வரப்பட்டுள்ளது. இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில் ஏற்கனவே பிராட் கேஜ் தண்டவாளங்களில் இவை பயன்படுத்தப்பட்டுள்ளது. மலைரயில் பாதையில் பயன்படுத்துவது இதுவே முதன்முறை. காட்டேரி அருகே உள்ள பாலம் ஒன்றில் பயன்படுத்துவதற்காக இப்புதிய ஸ்லீப்பர் கட்டைகள் கொண்டு வரப்பட்டுள்ளது. 20 ஆண்டுக்கும் மேலாக உழைக்க கூடியது என்ற சான்றிதழ் பெற்றுள்ள இவற்றை தண்டவாளத்தில் பொருத்தி சோதனை ஓட்டம் நிகழ்த்தப்படும். நன்றாக இருந்தால் மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரையிலான மலைரயில் பாதையில் காம்போஷிட் ஸ்லீப்பர் கட்டை பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

Related Stories: