மசூதிகள் இடிக்கப்படும்...போராடுவோரை துடைத்தெறிவேன்: டெல்லி பாஜக எம்.பி. பர்வேஷ் வர்மாவின் மிரட்டல் பேச்சால் பெரும் சர்ச்சை

புதுடெல்லி: துரோகிகளை சுட்டுத்தள்ளுங்கள் என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியதால் எழுந்த சர்ச்சை அடங்குவதற்குள், பள்ளிவாசல்கள் இடிக்கப்படும் என்று பாரதிய ஜனதா எம்.பி. கூறியிருப்பது மேலும் சர்ச்சையை அதிகரித்துள்ளது. பாரதிய ஜனதாவை சேர்ந்த டெல்லி மேற்கு தொகுதி எம்.பி.யான பர்வேஷ் வர்மா தான் மத மோதலை உண்டாக்கும் இந்த சர்ச்சை கருத்தை கூறியுள்ளவர். விகாஷ்புரி சட்டப்பேரவை தொகுதிக்குபட்பட்ட ரன்புல்லா கிராமத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் பர்வேஷ் வர்மா பங்கேற்று பேசினார். டெல்லியில் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தால் அரசு நிலங்களில் உள்ள பள்ளிவாசல்கள் அனைத்தும் இடிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஒரு மாத காலமாக டெல்லி ஷாஹின் பாக்தில் நடந்து வரும் போராட்டத்தை பாரதிய ஜனதா எம்.பி. பர்வேஷ் வர்மா சாடியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், டெல்லியில் நடைபெறுவது சாதாரண சட்டப்பேரவைத் தேர்தல் அல்ல. இந்த நாட்டின் பாதுகாப்புக்காக கொண்டு வரப்பட்டுள்ள குடியுரிமைச் சட்டத்தை உறுதிபடுத்தும் தேர்தல். டெல்லியில் ஷாகின்பாக் பகுதியில் போராட்டம் நடத்துபவர்கள் வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்கள் தான். அவர்களால் உங்கள் உடமைக்கும், உயிருக்கும் ஆபத்து ஏற்படும். அவர்கள் பாலியல் பலாத்காரம் மற்றும் கொலையில் ஈடுபடுவார்கள். போராட்டக்காரர்களை தீர்த்துக்கட்ட ஒரு மணி நேரம் மட்டும் போதும். சட்டவிரோதமாக செயல்படுபவர்களை வெளியேற்றுவோம் என்று பர்வேஷ் வர்மா கூறியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. பிப்ரவரி 8ம் தேதி டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், பாரதிய ஜனதா எம்.பி.யின் பேச்சு கடும் கண்டனத்திற்கு ஆளாகி வருகிறது.

Related Stories: