×

ஒவ்வொரு துளி நீருக்கும் அதிக அறுவடை என்ற குறிக்கோளுடன் சாகுபடி செய்க: சர்வதேச உருளைக்கிழங்கு மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

டெல்லி: நாட்டில் உருளைக்கிழங்கு விளைச்சல் குறித்த ஆய்வு, அந்தத் துறையில் உள்ள சவால்கள், அவற்றுக்கான தீா்வுகள் ஆகியவை குறித்து விவாதிப்பதற்காக 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ‘சர்வதேச உருளைக்கிழங்கு மாநாடு’  நடத்தப்படுகிறது. இதற்கு முன்னா் கடந்த 1998 மற்றும் 2008-ஆம் ஆண்டுகளில் இந்த மாநாடு நடைபெற்றது. இந்திய உருளைக்கிழங்கு சங்கம், டெல்லியில் உள்ள விவசாய ஆராய்ச்சிக்கான இந்திய கவுன்சில், மத்திய உருளைக்கிழங்கு ஆராய்ச்சி  நிறுவனம் ஆகியவை இணைந்து இந்த மாநாட்டை நடத்துகின்றன.

இந்நிலையில், குஜராத் மாநிலம் காந்திநகர் மாவட்டத்தில் நடைபெறும் சர்வதேச உருளைக்கிழங்கு மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது,  நீர்ப்பாசனத்திற்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அணுகுமுறை பணிகள் மேற்கொள்ள காட்டிய பிரதமர் மோடி, ஒவ்வொரு துளி நீருக்கும் அதிக அறுவடை என்ற குறிக்கோளுடன் சாகுபடி மேற்கொள்ள வேண்டும் தெரிவித்தார்.  டெல்லியில் இருந்து உலக உருளைக்கிழங்கு மாநாடு நடத்தப்படுவது நல்லது. இது குஜராத்தில் நடைபெறுகிறது & இது முக்கியமானது, ஏனெனில் உருளைக்கிழங்கு உற்பத்தியைப் பொருத்தவரை இது இந்தியாவின் முன்னணி மாநிலமாகும்  என்று தெரிவித்தார்.

மேலும், உருளைக்கிழங்கு ஆராய்ச்சியில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள சாதனைகள், அந்தத் துறையில் உள்ள வாய்ப்புகள், அடுத்த 10 ஆண்டுகளுக்கு உருளைக்கிழங்கு துறை எதிர்கொள்ளவிருக்கும் சவால்கள் மற்றும் அதை  கையாளுவதற்கான வழிமுறைகள் ஆகியவை குறித்து பிரதமா் மோடி பேசினார். இன்று தொடங்கிய  சர்வதேச உருளைக்கிழங்கு மாநாடு 3 நாள்கள் நடைபெறுகிறது. நாட்டில் உருளைக்கிழங்கு உற்பத்தியில் குஜராத் முன்னிலை வகிப்பதால்,  அங்கு இந்த மாநாடு நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. அரசு வெளியிட்டுள்ள தகவல்படி, குஜராத்தில் கடந்த 2006-07ஆம் ஆண்டை ஒப்பிடும்போது, கடந்த 2017-18 ஆம் ஆண்டில் இருமடங்கு அதிகமாக சுமார் 13.3 லட்சம் ஹெக்டோ் பரப்பளவில்  உருளைக்கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது.

Tags : Modi ,International Potato Conference ,speech , Cultivate every drop of water with the goal of high harvest: PM Modi talks at the International Potato Conference
× RELATED ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம்;...